Showing posts with label பாவாணர். Show all posts
Showing posts with label பாவாணர். Show all posts

Saturday, 26 November 2016

தாய்மை

பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர். தமிழர் மதம் எனும் பாவாணரின் நூலில், உலகின் ஏனைய மொழிகளின் தாய்மொழி என போற்றப்படும் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழி சொற்களும் பல தமிழில் இருந்தே பிறந்தனவென்று பதிவிடுகிறார்!
எ. கா. Navy - நேவி - நாவுதல்

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

எண்மை (எளிமை)

எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.

தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை. (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான ஒலிகொண்ட சொற்கள், இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ட்சி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

தண்டலை மயில்க ளாடத்
தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட
மருதம்வீற் றிருக்கு மாதோ
                      - கம்பர்

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர். ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களேயன்றித் தனியெழுத்துக்களல்ல. வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார் என்க.

பாவாணர் கண்டளித்த தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள்,
  • தொன்மை, 
  • முன்மை; 
  • எண்மை (எளிமை), 
  • ஒண்மை (ஒளிமை); 
  • இளமை, 
  • வளமை; 
  • தாய்மை; 
  • தூய்மை; 
  • செம்மை, 
  • மும்மை; 
  • இனிமை, 
  • தனிமை; 
  • நுண்மை, 
  • திருமை; 
  • இயன்மை, 
  • வியன்மை 
 என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

மூலம்: தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஞா.தேவநேயப் பாவாணர்.


ஞா.தேவநேயப் பாவாணர், மொழிஞாயிறு எனப் போற்றப்பட்டவர்.

வேர்ச்சொல் ஆய்வு எனும் துறையைத் தொடங்கிய மூலவர்.

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, முதற்றாய்மொழி - தமிழாக்க விளக்கம்,
பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்,
திருக்குறள் - தமிழ் மரபுரை

முதலிய பற்பல அரும்பெரும் நூல்களைப் படைத்த பேரறிஞர்.

தமிழே உலக முதன்மொழி, தமிழனே உலகத்து மூத்த குடி, குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் என்ற முழக்கங்களின் மூலவர்.

தனித்தமிழ் இயக்கத்தின் தூணாகச் செயல்பட்டவர்.

:pray::pray::pray::pray::pray: