Showing posts with label சொற்கள் தொகுப்பு. Show all posts
Showing posts with label சொற்கள் தொகுப்பு. Show all posts

Saturday, 26 November 2016

இளமைப்பெயர்கள்

பறவைகள்,ஊர்வன - பார்ப்பு, பிள்ளை
பறவைகள், நண்டு, மீன், தேள் - குஞ்சு
காக்கை, கிளி, கீரி - பிள்ளை
மூங்கா, வெருகு - குட்டி,பறழ்
அணில் - குட்டி, பறழ், பிள்ளை
எலி - குட்டி, குஞ்சு
பன்றி, புலி, முயல், நரி -குருளை, குட்டி, பறழ், பிள்ளை
நாய்- குருளை,குட்டி,பறழ்
ஆடு,குதிரை,நவ்வி,உழைபுல்வாய்,மான்,அழுங்கு - மறி
குரங்கு - குட்டி, மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு
ஆடு, குதிரை, மான் - குட்டி
யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம் - கன்று
யானை, ஆ, எருமை, கடமை,மரை, குரங்கு, முசு, ஊகம் - குழவி
யானை - கயந்தலை, களபம், கன்று
அரிமா, ஒநாய் - குருளை, குட்டி
மாந்தன் - குழவி, மகவு, பிள்ளை, சேய், குழந்தை, பாப்பா
ஆளி - ஆணங்கு
கரடி -குடாவடி, குட்டி
காசறை(கத்தூரிமான்) - கரு
நாவி(புனுகுபூனை) - பிள்ளை
உடும்பு, ஒணான், பாம்பு - குட்டி
மாடு, எருமை - கன்று
பூனை, வாவல்(வௌவால்) - குட்டி
பேன் - செள்
பயிர்கள், செடிகள் - நாற்று
மரங்கள் - கன்று
தென்னை - பிள்ளை

பொதுவாக, முட்டையிடுபவற்றின் இளமைப்பெயர் குஞ்சு என்பதும், நேரடியாக ஈனுபவற்றின் இளமைப்பெயர் குட்டி என்பது மாகும்.

வளமை

சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,
அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,
கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.


தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.

யானையின் தமிழ்ப்பெயர்கள் தொகு
  1. யானை/ஏனை (கரியது)
  2. வேழம் (வெள்ளை யானை)
  3. களிறு
  4. களபம்
  5. மாதங்கம்
  6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
  7. உம்பர்
  8. உம்பல் (உயர்ந்தது)
  9. அஞ்சனாவதி
  10. அரசுவா
  11. அல்லியன்
  12. அறுபடை
  13. ஆம்பல்
  14. ஆனை
  15. இபம்
  16. இரதி
  17. குஞ்சரம்
  18. இருள்
  19. தும்பு
  20. வல்விலங்கு
  21. தூங்கல்
  22. தோல்
  23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
  24. எறும்பி
  25. பெருமா (பெரிய விலங்கு)
  26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
  27. புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
  28. ஒருத்தல்
  29. ஓங்கல் (மலைபோன்றது)
  30. நாக
  31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
  32. கும்பி
  33. தும்பி (துளையுள்ள கையை உடையது)
  34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
  35. குஞ்சரம் (திரண்டது)
  36. கரேணு
  37. உவா (திரண்டது)
  38. கரி (கரியது)
  39. கள்வன் (கரியது)
  40. கயம்
  41. சிந்துரம்
  42. வயமா
  43. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
  44. தந்தி
  45. மதாவளம்
  46. தந்தாவளம்
  47. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
  48. வழுவை (உருண்டு திரண்டது)
  49. மந்தமா
  50. மருண்மா
  51. மதகயம்
  52. போதகம்
  53. யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
  54. மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
  55. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

கன்று, பிள்ளை, குட்டி, குஞ்சு, சேய், குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க. அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.