Showing posts with label இயன்மை. Show all posts
Showing posts with label இயன்மை. Show all posts

Saturday, 26 November 2016

இயன்மை

இயல்பான தன்மை

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காகப் படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி. தேவமொழி என்பன போன்ற இயல்மற்ற தன்மை அல்லாமல், இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால் உருவானது என்க. (சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன.)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல், அதாவது, ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்.

தமிழ வல்லினங்கள், உண்மையில் மற்ற மொழி வல்லொலிகளோடு ஒப்பிடின் மெல்லினங்களே ஆயினும், அந்தச் சிறு வலிமையையும் எளிமைப்படுத்த மக்கள் வாய்பாடிய குற்றுகரங்களை யேற்றுப் பொலிந்து இலக்கணங் கண்ட மொழி தமிழொன்றே என்க. இதனைப் பின்னர் விரிப்போம்.