இடைநிலை என்றால் என்ன?
அதாவது, ஒரு சொல்லுக்குள், எந்தெந்த எழுத்துகளை அடுத்து எந்தெந்த எழுத்துகள் வரக்கூடாது என்பதே இடைநிலையாம். இதன் சில நெறிகளைக் காண்போம்.
இடைநிலை நெறி 1:
வல்லின மெய்க்குப் பின் வேறு எந்த மெய்யும் வராது வராது வராது. க் ச் ட் த் ப் ற் எனும் ஆறு மெய்யெழுத்துகள் வல்லின மெய்களாகும். இவற்றை அடுத்து எந்த மெய் எழுத்தும் வராது என்க... உயிர்மெய்களே வருமென்க.பயிற்ச்சி, புரட்ச்சி
என்பன போன்ற பிழைகளை இந்நெறியின் வழி திருத்திக் கொள்ளலாம்.
இடைநிலை நெறி 2:
கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும். அதாவது, க், ச், த், ப் எனும் மெய் எழுத்துகளின் பின் அம்மெய்கள் கொண்ட உயிர்மெய்கள் மட்டுமே வரும். பிற உயிரமெய்கள் வாரா.எ-டு: அக்கை, உச்சி, மெத்தை, உப்பு...
இடைநிலை நெறி 3:
ர, ழ என்ற இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும். ரகர ழகர மெய்கள், ரகர ழகர உயிர்மெய்களோடு சேரா. பிற உயிர்மெய்களோடு மட்டுமே சேரும்.எ-டு: கூர்மரம், வாழ்நிலம்...
ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். க, ச, த, ப, ர, ழ ஆகிய ஆறனைத் தவிர மற்ற மெய் எழுத்துகள் அதே மெய் கொண்ட உயிர்மெய்யோடு பிற உயிர்மெய்யோடும் வரும்.
எ-டு:
என்னை/என்று; அம்மா/அம்பு; என்பன போன்று.
இடைநிலை நெறி 4:
தனிக்குறிலை அடுத்து ரகர மெய்யும் ழகர மெய்யும் நிற்காது. நிற்காது என்று சொல்லப்பட்ட நெறியை மீறி நிற்பவை தமிழல்ல என்க.எ-டு : அர்ச்சனை, கர்ப்பம் போன்ற பல வடமொழிகளை களைய இந்நெறி உதவும்.
No comments:
Post a Comment