எழுத்திலக்கணத்து உறுப்புகளாவன பன்னிரண்டாம். அவை
- எண் (எழுத்துகளின் தொகை)
- பெயர் (வகை)
- முறை (வைப்பு முறை)
- பிறப்பு (எழுத்துகள் பிறக்கும் முறை)
- உருவம் (எழுத்துகளின் உருவம்)
- மாத்திரை (எழுத்துகளின் அளபு)
- முதனிலை (சொல்லின் முதலில் நிற்கும் எழுத்துகள்)
- ஈறுநிலை (சொல்லின் இறுதியில் நிற்கும் எழுத்துகள்)
- இடைநிலை (இந்த இந்த எழுத்தின் பின் இந்த இந்த எழுத்துகள் சொற்களின் இடையில் வருதல் பற்றியது)
- போலி (ஐ - அய்...)
- சொல்லுருவாக்கம் (எழுத்துகள் சொற்களாக உருவாகும் முறை)
- புணர்ச்சி (இரு எழுத்துகள் சேரும் போதான நிலை)
No comments:
Post a Comment